உலர்பழ பருப்பு பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளை ரவை - 1 கப்

சர்க்கரை - 3/4 கப்

ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சை - 1/2 கப்

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ரவையை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு தண்ணீரை வடிக்கட்டி விட்டு மிக்ஸியில் அதனுடன் சக்கரையை சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.

மேற்கொண்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

மாவுடன் ஏலப்பொடி, நறுக்கிய உலர் பழங்கள், பருப்பு வகைகள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து குழிக்கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி மிதமான தீயில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: