ஈஸி பால் கோவா

on on on on off 4 - Great!
4 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மில்க் மெய்டு - 1 டின் ( 500 கி )

தயிர் - 125 கி

பால் - 150 மி.லி

நெய் - 100 கி

செய்முறை:

ஒரு non-stick சட்டியில் மில்க் மெய்டெய்யும்,தயிரையும் போட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.

அதனுடன் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

ஒரு மரக் கரண்டியால் கை விடாமல் கிண்டவும்.

முதலில் கொஞ்சம் தண்ணியாக இருக்கும்.

பிறகு,கொஞ்சம் thick -ஆனவுடன் பாதி நெய்யை ஊற்றி கிண்டவும்.

பால் கோவா பதம் வரும் முன்பு மீதி நெய்யை கொஞ்சம்,கொஞ்சமாக ஊற்றி கை விடாமல் கிண்டவும்.

பால் கோவா நெய்யை கக்கும் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: