ஈஸி அவல் பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - 3 கப்

அவல் - 1/2 கப்

ஏலக்காய் - 1

முந்திரிப் பருப்பு - 4

உலர்ந்த திராட்சை - 4

நெய் - 1/2 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி

குங்குமபூ - 1 சிட்டிகை

சர்க்கரை - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் 3 கப் பாலினை நன்றாக 2 கப் பாலாக வரும் வரை காய்ச்சவும்.

பின் ஒரு வாணலியில் முந்திரி மற்றும் உலர்ந்த திரட்சை நெய்யில் வறுத்து எடுக்கவும்.

இதனை பாலில் சேர்த்து கொள்ளவும். ஏலக்காயினை தட்டி பாலில் சேர்க்கவும்.

பிறகு நெய், சர்க்கரை மற்றும் குங்கும பூவினையும் இத்துடன் சேர்க்கவும்.

கடைசியில் அவலினை சேர்த்து கலக்கிவிட்டு அடுப்பினை அணைத்துவிடவும்

குறிப்புகள்: