ஈசி கேசரி
தேவையான பொருட்கள்:
வறுத்த ரவை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
கேசரி பவுடர் - 1/2 சிட்டிகை
முந்திரி பருப்பு - 10
உலர்ந்த திராட்சை / கிஸ்மிஸ் - 10
ஏலக்காய் - 4 என்னம்
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் இரண்டு கப் தண்ணீர் ( ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர்) விட்டு அதில் கேசரி பவுடர், ஏலக்காயை கிள்ளி போடவும்.
கொதித்ததும் ரவையை போட்டு கிளறவும்.ரவை நன்கு வெந்து வரும்
பின் அடுப்பில் இருந்து இறக்கி சர்க்கரை போட்டு கிளறவும். சர்க்கரை இளகி கட்டி யில்லாமல் ரவை கிளறவரும்.
அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் நெய்யை ஊற்றி சிறிது நேரம் அப்படியே சிம்மில் வைக்கவும்.
அப்பொழுது தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து அப்படியே கேசரியில் கொட்டவும்.
பின் மேலும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ்ஸை பொரித்து கேசரியில் கொட்டவும். நன்கு கிளறி இறக்கி பரிமாறவும்.