ஈசி அல்வா
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
ரவை - 1 கப்
நெய் - 1 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பெரிய வாழைப்பழம் - 1
ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு ரவையை வறுக்கவும்.
பாதி வறுபடும் போது கோதுமை மாவையும் சேர்த்து வறுக்கவும்.
பாலில் கேசரி பவுடர் சிறிது கலந்து மாவில் விட்டு கிளற சுருண்டு வரும்.
சர்க்கரையை மிக்ஸியில் தூள் செய்து போடவும்.
இரண்டு மூன்று நிமிடங்களுக்கு கிளறி, பிறகு வாழைப்பழத்தை சிறிது சிறிதாக நறுக்கிப் போட்டுக் கிளறவும்.
பிறகு ஏலக்காய் தூளையும் சேர்த்து கிளறி இறக்கவும்.