இனிப்பு சேவு (1)

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு - 2 கப்

கடலை மாவு - 1 1/2 கப்

மண்டை வெல்லம் துருவியது - 2 கப்

செய்முறை:

கடலைமாவையும், பச்சரிசிமாவையும் பிசைந்து காராச்சேவு போல் சுட்டு எடுத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

பாகை தண்னீர் உள்ள பாத்திரத்தில் ஊற்றிப் பார்த்தால் கையில் உருண்டையாக எடுக்க வரவேண்டும். பாத்திரத்தில் போட்டால் சத்தம் கேட்க வேண்டும். இந்த பக்குவத்தில் பாகை இறக்கி வைத்துக் கொள்ளவும்.

தயார் செய்து வைத்திருக்கும் காராச்சேவில் சிறிது எடுத்து ஒரு தாம்பாளத்தில் போட்டு சிறிது பாகு ஊற்றி கிளறி எடுக்கவும்.

இப்படியே மீதி காராச்சேவையும் கிளறி எடுக்கவும்.

பாகு ஆறிவிட்டால் சூடு பண்ணிக் கொள்ளவும். சேவில் உப்பு சேக்கக் கூடாது.

குறிப்புகள்: