இனிப்பு கொழுக்கட்டை
0
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 டம்ளர்
வெல்லம் - 3/4 டம்ளர்
தேங்காய் - 4 பத்தை
பச்சபருப்பு - 1 மேசைக்கரண்டி (ஊற வைத்தது)
ஏலக்காய் - 2 (பொடி செய்யவும்)
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
வெல்லத்தை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உப்பு ஒரு சிட்டிகை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டவும்.
இப்போது மாவில் துருவிய தேங்காய், ஊற வைத்த பச்ச பருப்பு, பொடி செய்த ஏலம், வடிகட்டிய வெல்ல தன்ணீர் போட்டு நல்ல பிசைந்து கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் ஈர துணியை விரித்து பிடித்த கொழுகட்டைகளை அவிக்கவும்.