இஞ்சி மிட்டாய்
0
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - 1/2 கிலோ
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து, சிறுதுண்டங்களாக நறுக்கி, மிக்ஸியில் நன்கு அரைக்கவும். 1/4 கப் நீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்
வெல்லத்தை 1/2கப் நீரில் கொதிக்க வைத்து, அத்துடன் இஞ்சி சாறை சேர்த்து கெட்டியான பதம் வந்ததும், இறக்கி விடவும்.
அகலமான தட்டில் நெய் தடவி தயாராக வைத்துக்கொள்ளவும்.
சின்ன ஸ்பூனால் எடுத்து இடைவெளி விட்டு சிறு வட்டங்களாக இடவும்.
ஆறியதும் தட்டில் இருந்து பிரித்து எடுத்து பரிமாறவும்.