இஞ்சி பர்பி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 150 கிராம்

சர்க்கரை - 600 கிராம்

அரிசி மாவு - 1 தேக்கரண்டி

மைதா மாவு - 2 தேக்கரண்டி

செய்முறை:

இஞ்சியை சுத்தம் செய்து, தோல் நீக்கி நன்கு அரைத்துக்கொள்ளவும்.

சர்க்கரையை 1/2 கப் நீரில் கரைத்து பாகு காய்ச்சவும்.

பாகை கையால் எடுத்து உருட்டினால் ஒட்டாமல் உருட்ட வரும் பதத்திற்கு இருக்க வேண்டும்.

பாகு அடுப்பில் இருக்கும் பொழுதே இஞ்சி விழுது, அரிசிமாவு சேர்த்துக்கிளறி இறக்கவும்.

மைதா மாவு தூவிய அகலமான தட்டில் விழுதை கொட்டி, தட்டையான கரண்டியால் சமமாக பரப்பி, சூடாக இருக்கும் பொழுதே, சிறிய சதுரங்களாக வில்லைகள் போட்டு, நன்கு ஆறவிட்டு, பிரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

தொண்டைகரகரப்பு. இருமல், சளி போன்றவற்றுக்கு ஏற்ற பர்பி இது.