இஞ்சி அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 200 கிராம்

சீனி (சர்க்கரை) - 1/2 கிலோ

தண்ணீர் - 4 கப்

பட்டர் (உருக்கியது) - 3 அல்லது 4 மேசைக்கரண்டி

முந்திரிகைபருப்பு (இரண்டாக்கியது) - 50 கிராம்

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். வெட்டிய இஞ்சி, 4 கப் தண்ணீர் ஆகியவற்றை கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு விழுதாக அரைக்கவும்.

விழுதாக அரைத்த இஞ்சியை ஓரளவான துணியில் போட்டு நன்றாக பிழிந்து வடித்து கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சீனி (சர்க்கரை), வடித்த இஞ்சி சாறு ஆகியவற்றை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

இவையிரண்டும் நன்றாக கொதித்ததும் அதில் இரண்டு மேசைக்கரண்டி பட்டரை போட்டு நன்றாக கிளறவும். அதன் பின்பு இன்னும் கொஞ்சம் பட்டரை எடுத்து அதை ஒரு தட்டின் எல்லா பக்கத்திற்கும் நன்றாக தடவி வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் உள்ள பாத்திரத்தில் செய்த கலவை அல்வா பதத்திற்கு வந்ததும் அக்கலவை யுள்ள பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.

இறக்கிய பாத்திரத்திலுள்ள கலவையை பட்டர் பூசிய தட்டில் ஊற்றி அதன் எல்லா பக்கங்களுக்கும் பரப்பவும் (1 CM தடிப்பு). பின்பு இக்கலவையை ஆற விடவும்.

இக்கலவை ஓரளவு ஆறியதும் இக்கலவையை ஒரளவு பெரிய நீள்சதுர துண்டுகளாக கீறிவெட்டிக் கொள்ளவும். அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து அதில் மிகுதியாக உள்ள பட்டரை போட்டு சூடாக்கவும்.

சூடாக்கிய பட்டரில் இரண்டாக உடைத்த முந்திரிகைபருப்பு துண்டுகளை போட்டு ஓரளவு பொரிக்கவும். பொரித்த பின்பு அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்பு கீறிவெட்டிய ஒவ்வொரு இஞ்சி அல்வா துண்டுகளின் மேற்பகுதியின் நடுவில் ஒவ்வொரு பாதி கயூகளையும் (முந்திரிய பருப்புகளையும்) அமர்த்தி வைத்து அலங்கரிக்கவும்.

அலங்கரித்த பின்பு இஞ்சி அல்வா துண்டுகளை நன்றாக ஆறவிடவும். அதன் பின்பு ஒரு தட்டில் இதை வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: