ஆப்பிள் மில்க் ஹல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 5

கன்டன்ஸ்ட் மில்க் - 1 டின்

நெய் - 100 கிராம்

ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி

கிராம்பு - 5

உலர்ந்த திராட்சை - 2 தேக்கரண்டி

முந்திரி - 10

செய்முறை:

முதலில் ஆப்பிளை தோல் சீவி துருவி ஒரு வாணலியில் போட்டு 50 கிராம் நெய் விட்டு அதை நன்கு வதக்கவும்.

ஆப்பிள் நன்கு வதங்கியதும் அதில் கன்டன்ஸ்ட் மில்க்கை சேர்த்து ஏலக்காய் பொடியையும் போட்டு நெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்.

பிறகு மீதியுள்ள நெய்யில் முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை பொறித்து அதில் சேர்த்து சூடாகவோ அல்லது அறை சூட்டிலோ அதை பரிமாறவும்.

குறிப்புகள்: