ஆப்பிள் அல்வா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 3

சர்க்கரை - 1 கப்

ஆரஞ்ச் கலர் - 1 சிட்டிகை

சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்

நெய் - 1/4 கப்

ஏலக்காய் - 2

நெய்யில் வறுத்த முந்திரி - சிறிதளவு கடைசியில் சேர்க்க

செய்முறை:

முதலில் ஆப்பிளின் தோல் மற்றும் நடுவில் உள்ள விதைகளினை நீக்கி காரட் துருவது போல துருவி கொள்ளவும்.

நாண் ஸ்டிக் கடாயில் துருவிய ஆப்பிளினை போட்டு சிறிது நெய் சேர்த்து வதக்கவும்.

நெய்யினை சிறிது சிறிதாக சேர்த்து ஆப்பிளினை நன்றாக வதக்கவும்.

ஆப்பிள் நன்றாக வதங்கிய பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும்.

சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு கோவா, ஆரஞ்ச் கலர்( 1 தேக்கரண்டி தண்ணீருடன் கலந்து கொள்ளவும்) சேர்த்து கிளறவும்.

நன்றாக அல்வா பதமாக சுருண்டு வரும் பொழுது ஏலக்காய் மற்றும் முந்திரி சேர்த்து கிளறவும்.

குறிப்புகள்: