அவல் பாயாசம்
தேவையான பொருட்கள்:
அவல் - 200 கிராம்
சீனி - 1/4 கிலோ
பயத்தம் பருப்பு - 50 கிராம்
நெய் - தேவைக்கு
காய்ச்சின பால் - 1/4 லிட்டர்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
முந்திரி - விருப்பத்திற்கு
செய்முறை:
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு அவலை வாட்டி கையால் ஒன்றிரண்டாக நொறுக்கி கொள்ளவும்.
பயத்தம் பருப்பை லேசாக வாட்டிக் கொள்ளவும்.
குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு பயத்தம் பருப்பை சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். (பருப்பு குழையாமல் வேக வைக்கவும்.)
பயத்தம் பருப்போடு அவல் சேர்த்து வெந்ததும் அதில் சீனி சேர்த்து கொதிக்க வைக்கவும். ( குக்கரை மூடாமல் வேக வைக்கவும் )
வாணலியில் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்.
இறக்கி வைத்து ஏலக்காய் தூள், பால் சேர்த்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இதை சூடாகவும் பருகலாம், ப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.
இரண்டு நாட்களுக்கு கெட்டுப்போகாது.