அவல் பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

சர்க்கரை - 1/2 கப்

காய்ச்சிய பால் - 1/4 லிட்டர்

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 3

குங்குமப்பூ - 2 சிட்டிகை

கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை

திராட்சை - 6

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அவல் போட்டு வறுத்துச் சிவந்தவுடன் தண்ணீர் கலந்து கட்டியாகாமல் கிளறவும்.

அவல் நன்கு வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கரைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

காய்த்து வைத்த பாலுடன் குங்குமப்பூ, கேசரிப்பவுடர், ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கலக்கி அவலோடு சேர்த்து நன்கு கலக்கவும்.

இறுதியில் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை இவற்றைச் சேர்க்கவும். சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: