அவல் சர்க்கரை பொங்கல்
0
தேவையான பொருட்கள்:
அவல் - 1 1/2 டம்ளர்
சர்க்க்ரை - 1 1/2 டம்ளர்
பால் - 2 1/2 டம்ளர்
ஏலக்காய் - 3
முந்திரி - 10
நெய் - 1/4 டம்ளர்
செய்முறை:
அவலை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
1 ஸ்பூன் நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்துக் கொண்டு, மீதி நெய்யில் அவலை சிவக்க வறுக்கவும்.
அவலுடன் பாலை சேர்த்து வேக விடவும்.
நன்கு கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
வேகும் போதே சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கிளறவும்.
கெட்டியாக வந்ததும் வறுத்த முந்திரி, ஏலக்காய்தூள் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.