அவல் கேசரி (4)
0
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 1 1/2 கப்
கேசரி கலர் பொடி - 1/4 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
முந்திரி - 10
நெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் சிறிது நெய்யை சூடாக்கி முந்திரியை போட்டு வறுக்கவும்.
பின் அவலையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே வைக்கவும்.
கடாயில் பாலை சூடாக்கவும். பால் கொதிவந்த பின் கேசரி கலர் பொடி, வறுத்த அவல் சேர்த்து வேகவிடவும்.
அவல் வெந்த பின் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து கிளறவும். ஒட்டாத பதம் வந்த பின் முந்திரி தூவி சூடாக பரிமாறவும்.