அவல் கேசரி (3)
0
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
முந்திரி - 10 (நெய்யில் வறுத்தது)
உலர்ந்த திராட்சை - 10 (நெய்யில் வறுத்தது)
பால் - 1/2 கப் (காய்ச்சியது)
சிவப்பு கலர் பொடி - 1 சிட்டிகை
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் - 2 (நசுக்கியது)
செய்முறை:
அவலை நெய்யில் வறுக்கவும்.
2 கப் தண்ணீர் (1/2 கப் பால் + 1 1/2 கப் தண்ணீர்) ஊற்றி கொதித்ததும் சிவப்பு கலர் பொடி,ஏலக்காய், அவலை போட்டு நன்கு கிளறவும்.
நன்கு வெந்ததும் முந்திரி, திராட்சை போட்டு சர்க்கரையையும், 1 டீஸ்பூன் நெய்யை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி பரிமாறவும்.