அல்வா
தேவையான பொருட்கள்:
கோதுமை - 250 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
ஜவ்வரிசி - 50 கிராம் (நைசாக பொடிக்கவும்)
பால் - 1 1/2 கப்
நெய் - 100 கிராம்
முந்திரி - 25 கிராம்
ஏலக்காய் - 8
செய்முறை:
கோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும்.
நான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு,மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே 3 மணி நேரம் வைக்கவும்.
மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒருகப் பாலில் ஜவ்வரிசி மாவை கரைத்து சேர்க்கவும்.
பாதி நெய்யை அதனுடன் சேர்த்து, துடுப்பால் நன்கு கிளறி அடுப்பில் வைத்து கிளறவும்.
சுருள வரும் போது மீதியுள்ள பாலில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேர்க்கவும்.
கைவிடாமல் நன்கு திரண்டு வரும் வரை கிளறவும்.
முந்திரியை ஒடித்து, மீதி நெய்யில் வறுத்து கலவையுடன் சேர்த்து கிளறவும்.
ஏலக்காயை தோல் நீக்கி, பொடியாக்கி அதனுடன் சேர்த்து கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் துண்டு போடவும்( நன்கு திரண்டு, நெய் கக்குவது போல் வரும்)