அரிசி கேசரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

முந்திரிப்பருப்பு - 12

சீனி - 2 கப்

நெய் - 6 மேசைக்கரண்டி

ஏலக்காய் - 1

கேசரி கலர் பவுடர் - 2 சிட்டிகை

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் அரிசியை போட்டு அதன் மேல் இரண்டு மேசைக்கரண்டி நெய் ஊற்றி நன்கு வறுக்கவும். அரிசி நன்கு பொரிந்து நிறம் சற்று மாறியதும் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

அதே வாணலியில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் கலர் பவுடரை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது ஏலக்காய் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.

அரிசி ஆறியதும் மிக்ஸியில் அரிசியை போட்டு ரவை பதத்திற்கு பொடிக்கவும்.

தண்ணீர் கொதித்ததும் பொடித்த அரிசியை கொட்டி கொண்டே கிளறி விடவும். கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

அரிசி வெந்த பிறகு சீனியை சேர்த்து கிளறி விடவும். அதில் வறுத்த முந்திரியை போட்டு மூன்று மேசைக்கரண்டி நெய் ஊற்றி ஐந்து நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.

கெட்டியான பதம் வந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கவும். தேவைப்பட்டால் மேலும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.

குறிப்புகள்: