அரிசி அல்வா
0
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/2 கிலோ
தேங்காய் - 1
வெல்லம் - 3/4 கிலோ
ஏலக்காய் - 2
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
அரிசியை சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
ஊறிய அரிசியுடன் தேங்காயை போட்டு அரைக்கவும்.
பாதி அரைத்ததும் வெல்லம்,ஏலக்காய் போட்டு நன்றாக மை போல் அரைக்கவும்.
தண்ணீர் ஊற்றி தோசைமாவு பதத்தைவிட கொஞ்சம் தளர்த்தியான பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியில் சிறிது நெய் ஊற்றி இந்த அரைத்த மாவையும் போட்டு நன்றாக கிளறவும்.
இது நன்றாக வெந்து கையில் ஒட்டாமல் ஒன்றாக சேர்ந்து வரும் பொழுது இரண்டு ஸ்பூன் நெய்யை விடவும்.
நெய் தடவிய தட்டில் இந்த கலவையை போட்டு கொஞ்சம் ஆறியதும் கத்தியால் கட் செய்து பரிமாறலாம்.