அத்திப்பழ ஸ்வீட்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அத்திப்பழம் - 1/4 கிலோ

பால் - 1/2 லிட்டர்

சீனி - 1/4 கிலோ

நெய் - 4 மேசைக்கரண்டி

முந்திரி பருப்பு - 50 கிராம்

பாதம் - 50 கிராம்

தண்ணீர் - 1/4 டம்ளர்

செய்முறை:

அத்திப்பழத்தை அரை மணி நேரம் பாலில் ஊற வைத்து அரைத்து எடுக்கவும்.

சீனியினுள் கால் டம்ளர் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.

பாகு கம்பி பதத்தில் வந்தவுடன் அரைத்து வைத்த அத்திப்பழ விழுதையும் உடைத்த பாதம் முந்திரிப்பருப்பை போடவும்

பின்பு நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியவுடன் பீஸ் பீஸாக வெட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: