அத்திப்பழ அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அத்திப்பழம் - 500 கிராம்

ஸ்வீட்டன்ட் கன்டென்ஸ்டு மில்க் - 400 கிராம்

நெய் - 8 மேசைக்கரண்டி

முந்திரி - தேவைக்கு

பால் - 1 லிட்டர்

செய்முறை:

அத்திப்பழத்தை பாலில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பாலோடு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் அத்திப்பழ விழுது, கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது எடுத்து முந்திரியால் அலங்கரிக்கவும்.

குறிப்புகள்: