அதிரசம்
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கிலோ
அச்சு வெல்லம் - 1/4 கிலோ
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை 1 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை நன்றாக வடியவிட்டு மிக்ஸியில் அரைத்து ரவை சல்லடையில் சலிக்கவும். அதோடு ஏலப்பொடியை சேர்க்கவும்.
வெல்லத்தை பொடித்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். (பாகு பதம் வந்ததும் ஒரு தட்டில் தண்ணீர் விட்டு அதில் பாகை ஊற்றினால் உருட்டுவதற்கு ஜெல்லி போல் வர வேண்டும்)
பாகை பச்சரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறவும். நன்கு ஒன்றாக பிசைந்து 2 நாட்கள் வைத்து விடவும்.
எலுமிச்சை அளவு மாவை எடுத்து இலையிலோ அல்லது பாலிதின் பேப்பரிலோ எண்ணெய் தடவி தட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டிய அதிரசத்தை போட்டு சிவந்ததும் எடுக்கவும்.