அச்சு முறுக்கு (2)
3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ஊறவைத்த பச்சரிசி - 800 கிராம்
வெல்லம் ( பொடித்துக் கொள்ளவும்) - 500 கிராம்
எண்ணைய் - 1/2 லிட்டர்
செய்முறை:
ஊறவைத்த பச்சரிசியுடன் வெல்லம் சேர்த்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக (இட்லி மாவு பதத்தில்) ஆட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணையை ஊற்றி காயந்ததும் அச்சு முறுக்கு சுடும் அச்சில் மாவில் முக்கால் பாகத்திற்கு முக்கி எண்ணையில் விடவும்.
சில நிமிடம் அப்படியே இருக்கவும். மாவு மட்டும் எண்ணையில் இறங்கி விடும். சிவக்க வெந்தபின் ந்டுக்கவும்.