அச்சு முறுக்கு (1)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 4 ஆழாக்கு

வெல்லம் - 1/2 கிலோ

எண்ணெய் - 1/2 லிட்டர்

உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

பச்சரிசியை ஊறவைத்து, நைசாகவும், கெட்டியாகவும் ஆட்டிக்கொள்ள வேண்டும்.

வெல்லத்தை தட்டி சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவேண்டும்.

அந்த தண்ணீரை வைத்தே மாவை ஆட்டிக்கொள்ளலாம். ஒரு அகலமான பேஷனில் மாவை உப்புச்சேர்த்து கரைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து அச்சில் மாவை முக்கி, எண்ணெயின் உள்ளே விட்டு சிறிது நேரங்கழித்து, அச்சை எடுத்தால் மாவு எண்ணெயில் இறங்கிவிடும்.

பின்னர் திருப்பிப்போட்டு வெந்தவுடன் எடுக்கவேண்டும்.

குறிப்புகள்: