ஃப்ரூட் கேசரி (1)
தேவையான பொருட்கள்:
ரவை - 1 டம்ளர்
சர்க்கரை - 2 டம்ளர்
கேசரி பவுடர் - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
முந்திரி - 5
பாதாம் எசன்ஸ் - சில துளிகள் (விருப்பப்பட்டால்)
ஆப்பிள் - சிறு துண்
அன்னாசி - சிறு துண்டு
பேரீச்சம் பழம் - 3
பச்சை திராட்சை - 6
ட்ரை ஃப்ரூட்ஸ் - 1 தேக்கரண்டி
நெய் - 1/2 டம்ளர்
செய்முறை:
ஆப்பிள், அன்னாசி, பேரீச்சம் பழம் எல்லாவற்றையும் பொடி துண்டுகளாக நறுக்கவும். 1 ஸ்பூன் நெய்யில் முந்திரியை ஒடித்து, வறுத்து எடுக்கவும்.
அதே நெய்யில் எல்லா பழ துண்டுகளையும், ட்ரை ஃப்ரூட்ஸையும் சேர்த்து வறுத்து எடுக்கவும். ரவையை 1 ஸ்பூன் நெய் விட்டு, வறுத்து எடுக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டரை டம்ள்ர் தண்ணீர் விட்டு, கேசரி பவுடர் போட்டு அடுப்பில் வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதிக்கும் போது, ரவையை தூவி கட்டியில்லாமல் கிளறவும்.
ரவை வெந்ததும், சர்க்கரையை சிறுது சிறிதாக சேர்த்து, கட்டியின்றி கிளறவும்.
கேசரி கெட்டியாக வரும் போது, நெய், தூளாக்கிய ஏலக்காய், எசன்ஸ், பழ துண்டுகள், முந்திரி எல்லாம் போட்டு, கிளறி இறக்கி பரிமாறவும்.