ஸ்பெஷல் சிக்கன் ப்ரை
1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வறுத்த கோழி - 12 துண்டு
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
முட்டை - 2
முந்திரி பருப்பு - 20 எண்ணிக்கை
மிளகு, சீரக தூள் - 2 தேக்கரண்டி\
எண்ணெய் - 7 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கவும்
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் உப்பு போட்டு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
அதனுடன் மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
அதில் வறுத்த கோழி துண்டுகளைப் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி மேலே வறுத்த முந்திரி போட்டு பரிமாறவும்.