ஸ்க்ரம்பில்டு எக்ஸ்

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முட்டை - 6

உருளைக்கிழங்கு - 1

தக்காளி - 1

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லித் தழை - 2 மேசைக்கரண்டி

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முட்டையுடன் கொத்தமல்லித் தழை, தூள் வகைகளை சேர்த்து கலந்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, நறுக்கிய வெங்காயம், மெல்லியதாக சீவிய உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து பிரட்டவும்.

பின் நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டவும்.

தக்காளி குழையாத அளவிற்கு பிரட்டி, முட்டை கலவையை பரவலாக ஊற்றி கலந்து விடவும்.

அடிக்கடி கிளறி விட்டு முட்டை முழுவதும் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: