ஷாமி கபாப்
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ (கொழுப்பு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கியது)
கொண்டைக்கடலை - 1 கப் (ஒரு மணி நேரம் வெந்நீரில் ஊறவைத்தது)
நீள நீளமாக அரிந்த பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - சிறிது
கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 7
முட்டை - 1
வினிகர் - 1 தேக்கரண்டி
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தனியாக:
இஞ்சி - சிறிது
நறுக்கிய வெங்காயம் - 1
பொடி பொடியாக அரிந்த புதினா - 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் (மட்டன்,வினிகர்,முட்டை) தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு கொதிக்கவும்.
வாணலியில் எண்ணையை ஊற்றி கறித்துண்டுகளைப் போட்டு வறுக்கவும்.
பொன்னிறமாக வறுபட்டதும், ஏற்கனவே கொதிநிலைக்கு வந்த மசாலாக்களையும் வினிகர் மற்றும் முட்டையைக்கலக்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு வறுபட வேண்டும்.
தண்ணீர் வற்றும் வரை வெந்ததும் இறக்கிவிடவும்.
இதன் மேல் தனியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி, வெங்காயம், புதினா ஆகியவற்றை சேர்க்கவும். எலுமிச்சைசாறையும் பிழிந்துவிட்டு பரிமாறவும்.