வெள்ளை சிக்கன் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 5

இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் துண்டுகளில் இரண்டு மூன்று கீறல் போடவும். மேற்கண்ட எல்லாவற்றையும் அரைத்து சிக்கனில் சேர்த்து பிரட்டவும்.

ஒரு மணிநேரம் ஊறவிடவும். எண்ணெயை காயவிட்டு அதில் ஊறிய சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.

எண்ணெய் விரும்பாதவர்கள் அரை ஸ்பூன் எண்ணெய் மட்டும் சூடாக்கி அதில் சிக்கன் துண்டுகளை ஒரு பிரட்டு பிரட்டி தீயை குறைத்து தண்ணீர் பெருகியபின் தண்ணீரை வற்றவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: