விறால் மீன் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்யப்பட்ட விரால் மீன் துண்டுகள் - 12

தேங்காய்த்துருவல் - 1 கப்

சின்ன வெங்காயம் - 7

சிறிய பூண்டிதழ்கள் - 10

இஞ்சித்துருவல் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய், சோம்பு, இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவற்றை நன்கு விழுதாக அரைத்து

மீன் துண்டுகளில் சேர்க்கவும்.

அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிசிறி வைக்கவும்.

ஒரு மணி நேரம் மசாலா ஊறியதும் சூடான எண்ணெயில் மீன் துண்டுகளை பொன்னிறமாக இரு புறமும் பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: