வாழைப்பூ இறால் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1

இறால் - 15

பச்சை மிளகாய் - 2

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

சின்ன வெங்காயம் - 9

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கல் உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரிசி களைந்த தண்ணீரில் போடவும். தண்ணீரில் இருந்து வாழைப்பூவை பிழிந்து எடுத்து உப்பு போட்டு நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காமல் இருக்கும். உப்பு போட்டு நன்கு பிசைவதனால் துவர்க்காமல் இருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு நன்கு பிரட்டி விடவும்.

பிறகு இறாலை போட்டு மேலே ஒரு சிட்டிகை உப்பு தூவி ஒரு நிமிடம் நன்கு பிரட்டி விடவும்.

அதில் வாழைப்பூவை போட்டு இடையில் 6 நிமிடம் நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

6 நிமிடம் கழித்து தேங்காய் துருவலை மேலே தூவி ஒரு முறை கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: