ரவா கணவா ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
கணவா - 200 கிராம்
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
ரவை - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
முட்டை - 1
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பௌலில் கணவாயுடன் கார்ன் ஃப்ளார், உப்பு மற்றும் தூள் வகைகளைச் சேர்த்து முட்டையின் வெள்ளை கருவையும் சேர்த்து நன்றாகப் பிரட்டிக் கொள்ளவும்.
இக்கலவையை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பிறகு ஒரு தட்டில் ரவையை பரப்பி, அதில் கணவாயை பிரட்டி எடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கணவாயைப் போட்டு உடனே திருப்பிவிடவும். 2 நிமிடங்கள் கழித்து எடுத்து விடவும்.
குறிப்புகள்:
பார்ட்டிகளுக்கு ஸ்டாட்டராக பரிமாறலாம்.
கணவாய் 1 - 2 நிமிடங்களில் வெந்துவிடும். அதிக நேரம் அடுப்பில் வைத்திருந்தால் ஜவ்வு போல ஆகிவிடும்.