மூளை வறுவல் (1)
0
தேவையான பொருட்கள்:
மூளை - 2
சின்ன வெங்காயம் - 50 கிராம்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மூளையை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பொரிந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்த பின்பு மூளை துண்டுகளை போட்டு மிதமான தீயில் வைத்து மூளை நன்கு வதங்கியதும் இறக்கி பரிமாறவும்