முட்டை மற்றும் கோஸ் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 2,

முட்டைக்கோஸ் - 200 கிராம்

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 6

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முட்டைக்கோஸைப் பொடியாக நறுக்கி, கழுவி வைக்கவும். வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்

பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், முட்டைக்கோஸ், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.

உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். கோஸ் வெந்தவுடன், முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: