முட்டை பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 1

பெரிய வெங்காயம் - 1

தனி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தக்காளி - 1

சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். சோம்பை பொடி செய்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் நறுக்கின தக்காளியை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

பிறகு 2 நிமிடம் கழித்து தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள் மற்றும் உப்பு போட்டு ஒரு நிமிடம் பிரட்டவும். மிளகாய் தூள் வாசனை போகும் வரை பிரட்டவும்.

பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 3 நிமிடம் நன்கு கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

3 நிமிடம் கழித்து முட்டை உதிர்ந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: