முட்டை கைவீச்சு (காரம்)
0
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் பால் பொடி - தேக்கரண்டி
மிளகு பொடி - 1/4 தேக்கரண்டி
முந்திரி பருப்பு- 2 தேக்கரண்டி
சீரக பொடி - 1/ 2 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 7
மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முட்டையை, உப்பு, சீரக பொடி, மிளகு பொடி, மிளகாய் தூள், தேங்காய் பால் பொடிவுடன் நன்றாக அடித்து கொள்ளவும்
பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு, சின்ன வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி அடித்தக்கலவையை கொஞ்சம் ,கொஞ்சமாக கிளறி கொண்டு இருக்கும் போதே, முந்திரி பருப்பு, போட்டு சிவந்து வரும்போது இறக்கி சூடாக பரிமாறவும்.