மீன் வறுவல் (3)
தேவையான பொருட்கள்:
மீன் - 3/4 கிலோ
மிளகாய் வற்றல் - 12 அல்லது 15
பூண்டு - ஒரு முழு பூண்டு (சிறியது)
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை சுத்தம் செய்து, தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் மிளகாய் வற்றல், பூண்டு, கறிவேப்பிலை, உப்பு அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியான விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதை மீன் துண்டுகள் மீது தடவி குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
தோசை கல்லில் அல்லது ஒரு தவாவில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு மிதமான தீயில் வேக விடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போடவும்.
இரண்டு பக்கமும் நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
எல்லா வகை மீனிலும் செய்யலாம். குறிப்பாக வஞ்சரம் மீன் இந்த வறுவலுக்கு மிக நன்றாக இருக்கும்.