மீன் வறுவல்
0
தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் மீன் - 1/2 கிலோ
பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி
மிளகு தூள் - 1/2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோப்பையில் மீன் மற்றும் எண்ணெய் தவிர, மற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
கலந்து வைத்துள்ள மசாலாவில், மீன் துண்டுகளைப் பிரட்டி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலாவில் பிரட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
சோயா சாஸ் சேர்த்திருப்பதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.