மீன் பொரியல் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்து துண்டுகளாக்கிய விராலி மீன் - 1 கிலோ

கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம்

வறுத்த சிவப்பு மிளகாய் - 15

சீரகம் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

எண்ணைய் - 8 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வறுத்த மிளகாய், சீரகம், தனியாதூளை கர கரவென அரைக்கவும்.

தேங்காய் பாலுடன் அரைத்த பொடியை கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்த பின் மீனை சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயத்தை போடவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொதிக்கும் குழம்பில் கொட்டவும்.

மசாலா கெட்டியாகி மீன் துண்டுகள் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: