மீன் தேங்காய் பொரியல்
0
தேவையான பொருட்கள்:
மீன் - 5 துண்டுகள்
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 5
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
மீனோடு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு கலந்து 20 நிமிடம் ஊற விடவும்.
அரைக்க வேண்டியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் அளவாக எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு பொரிக்கவும்.
இரு புறமும் திருப்பி முக்கால் பாகம் வெந்ததும் அரைத்த கலவையை சேர்த்து மீன் துண்டுகள் உடையாமல் கிளறவும். தேங்காய் வெந்து சிவந்ததும் இறக்கி பரிமாறவும்.