மிளகு இறால் ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 2

மிளகாய் - 2

இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு

பூண்டு - 6 பல்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1/4 கோப்பை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறாலை நன்கு சுத்த்ம் செய்துக் கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய இஞ்சி பூண்டு ,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

பிறகு எல்லாத்துள் வகைகளையும் போட்டு உப்பை தூவி நன்கு வதக்கவும்.அடுப்பை இளஞ்சூட்டில் வைத்துவிடவும்.

மசாலா நன்கு இருகியவுடன், இறாலை போட்டு கிளறவும். இறால் வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: