மின்ஸ்ட் சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ

நீளமாக நறுக்கிய வெங்காயம் - 200 கிராம்

கீறிய பச்சை மிளகாய் - 6

விதை நீக்கிய சிகப்பு மிளகாய் - 8

சோம்பு - 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

எலுமிச்சை - 1

கொத்தமல்லித்தழை - 1/4 கப்

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை மிகவும் பொடியதாக கொத்தி வைக்க வேண்டும்.

எண்ணெய் சூடானதும் சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கும் போது நேரிடையாக எண்ணெயில் சேர்க்க வேண்டும்.

பிறகு மிளகாய் வகைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கொத்திய கறியை சேர்த்து எலுமிச்சைச்சாறு மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.

வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: