மட்டன் மிளகு வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் (அதிக எலும்பு இல்லாமல்) - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பூண்டு - 10 பல்

இஞ்சி - சிறிது

முந்திரி - 10

மிளகு - 2 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

நெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து, கழுவி வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, சோம்பு, முந்திரி, இஞ்சி, பூண்டு, தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றை நைசாக அரைக்கவும்.

அரைத்த மசாலா, உப்பு சேர்த்து மட்டனில் பிசிறி குக்கரில் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் ஆவியில் வேக வைப்பது போல் வேக வைத்து எடுக்கவும்.

வாணலியில் மீதி எண்ணெய், நெய்யை ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் வேக வைத்த மட்டனை கொட்டி கிளறவும்.

மிளகை தூள் செய்து சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: