மட்டன் பொடிமாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 10 பல்

தேங்காய் துருவல் - 1 கப்

பொட்டுக்கடலை - 1/2 கப்

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - ஒரு குழி கரண்டி

பட்டை - 4 துண்டு

கிராம்பு - 6

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

கறியை நன்கு கழுவிவிட்டு குக்கரில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

வாணலியை சூடாக்கி அதில் சோம்பு போட்டு சிவந்ததும் அத்துடன் பொட்டுக்கடலை, கசகசா சேர்த்து லேசாக வதக்கி இதை மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி வைக்கவும்

வெந்த கறியை மிக்ஸியில் போட்டு லேசாக ஒரு சுற்று சுற்றி படத்தில் உள்ளது போல் எடுக்கவும்.

உதிர்த்த கறியில் பொட்டுக்கடலை பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

அந்த கலவையில் சிறிதளவு தண்ணீர் தெளித்து ஒன்றாக பிசையவும்

வாணலியை சூடாக்கி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு வெடித்ததும் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதில் பொடிமாஸ் கலவையை சேர்த்து நன்கு வதக்கி சிவந்து முறுவலாகும் வரை வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த பொடிமாஸில் எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட சுவைக்கூடும்.