மட்டன் சுக்கா (1)
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
முழு பூண்டு - 1
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
முந்திரி - 10
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மட்டனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக அரிந்துக் கொள்ளவும்.
முந்திரியை சிறிது எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் மட்டன், வெங்காயம், தக்காளி, ஒன்றரை தேக்கரண்டி மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், ஒரு தேக்கரண்டி சீரகத்தூள், ஒன்றரை தேக்கரண்டி உப்பு மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு மற்றும் மிளகாய் வற்றலைப் போட்டு கிளறிவிட்டு, அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு கிளறி விட்டு, பின் வேக வைத்த மட்டன் குழம்பை போட்டு வதக்கவும்.
மட்டன் நன்கு வெந்தவுடன் நசுக்கிய பூண்டு, ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், வறுத்த முந்திரியை சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை சமைத்து பரிமாறவும்.