ப்ரெடெட் க்ரிஸ்பி ஃபிஷ்
0
தேவையான பொருட்கள்:
வாடையில்லாத மீன் - 1/4 கிலோ
எலுமிச்சைச்சாறு - 1/2 தேக்கரண்டி
மல்லி பொடி - ஒரு பின்ச்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/4 தேக்கரண்டி
முட்டை - 1
பிரெட் க்ரம்ஸ் - 1 கப்
எண்ணெய் பொரிக்க - 1 கப்
உப்பு - அரை தேக்கரண்டி
செய்முறை:
முதலில் முள்ளில்லாத வாடையில்லாத எளிதில் வேகும் வகை மீனை 3 இன்ச் நீளம், ஒரு இன்ச் அகல துண்டுகளாக வெட்டவும்.
துண்டுகளை கழுவி தண்ணீர் வடித்து உப்பு, எலுமிச்சைச்சாறு, இஞ்சி, மல்லி பொடி சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவிடவும்.
பிறகு முட்டையை நன்கு அடித்து அதில் ஊறிய மீனை முக்கி ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி ஒரு தட்டில் அடுக்கவும்.
அதனை ஃப்ரிசரில் 20 நிமிடம் வைக்கவும். இதனால் ப்ரெட் க்ரம்ஸ் நன்கு அதனுடன் ஒட்டும்.
பின்பு எண்ணெயை காயவைத்து அதில் அந்த துண்டுகளை இட்டு இருபுறமும் பொன்நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்..