ப்ரான் ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
இறால் உரித்தது - 1/2 கிலோ
காஷ்மீரி சில்லி பவுடர் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
ப்ரெட் க்ரெம்ஸ் - 1 மேசைக்கரண்டி
பொரிக்க எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டவும்.
குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து அரை மணி - 1 மணி நேரம் வைக்கவும்.
நாண் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு இறால் மொத்ததையும் போட்டு திருப்பி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.