பொரிச்ச கருவாடு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெய்மீன் கருவாடு - 2 துண்டு

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 6 எண்ணிக்கை

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.

மிளகாயை பொடியாக நறுக்கவும். கருவாட்டை கழுவி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவாட்டை சிவக்க பொரித்து எடுக்கவும்.

அதே எண்ணெயில் வெங்காயம், மிளகாயை போட்டு சிவக்க வதக்கவும்.

வதக்கியதில் ஒரு துண்டு கருவாட்டை போட்டு நன்றாக கொத்தி கிளறி விடவும்.

மீதமுள்ள கருவாட்டை வெங்காயத்தின் மேல் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கருவாட்டில் உப்பு இருப்பதால் நான் சேர்க்கவில்லை தேவைப்பட்டால் சேர்க்கலாம்.

சாம்பார், ரசம் சாதம், பழைய கஞ்சிக்கு சூப்பர் காம்பினேஷன்.