பேச்சுலர்ஸ் மட்டன் சுக்கா
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1 கிலோ
மிளகாய்த் தூள் - 2 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 200 கிராம்
நறுக்கிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கறியைக் கழுவி தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் போட்டு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் போட்டு பிசறி, 100 கிராம் வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு போட்டுக் கிளறவும்.
பிறகு குக்கரை மூடி 10 விசில் வரவிட்டு, குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்து இறக்கவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை).
கடாயில் எண்ணெய் விட்டு மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் குக்கரில் வேக வைத்த கறிக் கலவையைக் சேர்த்துக் கிளறவும்.
கறி தண்ணீர் விட்டு தான் இருக்கும். சிறிது நேரம் கிளறினால் தண்ணீர் வற்றிவிடும்.
நன்றாகத் தண்ணீர் வற்றியவுடன் மிளகுத் தூள் போட்டு சிறு தீயில் வைத்து, 10 நிமிடங்கள் கிளறி இறக்கி பரிமாறவும்.